பல்லவி
அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா,-குருபரா
சரணங்கள்
1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த - அமலா
2. அந்தம் அடி நடு இல் லாத தற்பரன் ஆதி,
சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி. - அமலா
3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,
வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத. - அமலா
4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,
தோணப்படா வியாப, சுகிர் தத் திருத் தயாப. - அமலா
5. சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாயா,
கர்த்தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா - அமலா
6. எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
சொல் அரிதாம் நிதான, துல்லிபத் தொன்றாம் மேலான - அமலா
7. கருணாகரா, உப காரா, நிராகரா,
பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா - அமலா
ராகம்: ரீதிகௌள
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வேதநாயகம் சாஸ்திரியார்