17. அரூபியே அரூப சொரூபியே

பல்லவி

அரூபியே, அரூப சொரூபியே,-எமை
ஆளும் பரிசுத்தரூபியே, அரூப சொரூபியே.

அனுபல்லவி

திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன
சுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான - அரு

சரணங்கள்

1. ஆதி காரண அரூபியே,-அசரீரி சத்ய
நீதி ஆரண சொரூபியே,
வேத வாசக சமுத்ர, ஓதும் வாய்மைகள் சுமுத்ர,
தீதிலா துயர் விசித்ர, ஜாதி யாருட பவித்ர - அரூ

2. சீரு லாவிய தெய்வீகமே,-திரி முதல் ஒரு பொருள்
ஏரு லாவிய சிநேகமே,
பாருளோர் பணிந்து போற்றும் ஆரியா, அடியர் சாற்றும்
நேரமே புகழை ஏற்றும்; வீரமாய் மனதை ஆற்றும் - அரூ

3. பக்தர் பாதகம் அடாமலே,-பசா சுலகுடல்
சத்ரு சோதனை படாமலே,
அத்தனார் தேவ கோபம், நித்ய வேதனைகள் சாபம்,
முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன் ப்ரதாபம் - அரூ

ராகம்: சேனாவதி
தாளம்: ரூபக தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்