பல்லவி
அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே
அனுபல்லவி
பொல்லாப் பேய் நடுங்கிவிழப்
பொற்பரனின் சேயர் மகிழ. - அல்
சரணங்கள்
1. பாவம் பேயோடு மரணம்,
பாழன் பேயினது அரணம்,
சீவபரனால் திரணம்,
திடமாயடைவோம் அவர் சரணம். - அல்
2. வலுசிங்கம் சிறையாச்சு,
மாற்றானின் வல்லமை போச்சு,
அலகையுளதோ பேச்சு
அதுவிடலாமோ இனி முச்சு. - அல்
3. திருநாதர் பேயிருபேர்
செய்தார் கொடியதா மொருபோர்
அருணாதர் தாம் ஜெயம் நேர்
அடைந்தார் ஓ சபையே களிகூர். - அல்
ராகம்: சதானா
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்