21. அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்

பல்லவி

அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்?-அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்?

அனுபல்லவி

துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். - அதிசய

சரணங்கள்

1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,
எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. - அதிசய

2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. - அதிசய

3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? - அதிசய

4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே - அதிசய

5. பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மொத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே. - அதிசய

ராகம்: தேவகாந்தாரி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: சா. பரமானந்தம்