பல்லவி
அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா!
சரணங்கள்
1. கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே - நரர்
காண வந்தாரே;-பரன் நரர் காண வந்தாரே.
கரு ணாகர தேவா, அனந்த ஞான சொரூபா! - அனந்த
2. அந்தப் பரமானந்த குணாலா, ஆதத்தின் தீதற்ற மனுவேலா!-எமை
ஆண்டு கொண்டாரே,-பரன் எமை ஆண்டு கொண்டாரே,
ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா! - அனந்த
3. ஆடுகளுக் குரிமைக் கோனே, ஆரண காரணப் பெருமானே - நரர்க்
கன்பு கூர்ந்தாரே;-பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரே,
கிருபாசனத் தானே, அனந்த ஞான சொரூபா! - அனந்த
4. பந்தத் துயரந் தீர்த்தாரே, பாவத்தைச் சாபத்தை ஏற்றாரே;-எமைப்
பார்க்க வந்தாரே;-பரன் எமைப் பார்க்க வந்தாரே,
பரமாதிக்கத் தோரே, அனந்த ஞான சொரூபா! - அனந்த
ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்