பல்லவி
ஆண்டவா, மோட்சகதி நாயனே,
மீண்டவா, பாவிக் கிரங்கையனே.
சரணங்கள்
1. நீண்ட ஆயுளுள்ளவா, நெறிமறை கொடுத்தவா,
தாண்டி உலகில் வந்தாயே, தயாளமுள்ள யேசுவே - ஆண்டவா
2. பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே;
சித்தம் வைத்திரங்கமாட்டாயோ, தேவசீல மைந்தனே? - ஆண்டவா
3. பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட
ஜீவவாக்குரைக்கவில்லையோ, தேற்றல் செய்யும் மீட்பரே? - ஆண்டவா
4. பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயே;
ஆதரவுநீ தான் அல்லவோ, அருமையுள்ள அப்பனே? - ஆண்டவா
5. கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலே,
பொல்லாருக்கிரங்கவில்லையோ, பொறுமையுள்ள தேவனே? - ஆண்டவா
6. பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயே;
கோபமின்றி என்னை நோக்காயோ, குருசில் அறையுண்டவா? - ஆண்டவா
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: யோ. அருளப்பன்