54. ஆலயம்போய்த் தொழவா ருமென்ற

ஆலயம் போய்த் தொழ வாரும்

பல்லவி

ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்,

அனுபல்லவி

ஆலயந்தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே,
ஆவலாயதிகாலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் - ஆலயம்

சரணங்கள்

1. பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்;
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன் மாட்சி காணவே. - ஆலயம்

2. பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன் மாதிரி தந்தார்;
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்;
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்;
ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி. - ஆலயம்

3. தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று;
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று;
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலகு சுடர்கள்போல உலகுக்கொளியே தந்து
எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில் ஒன்றவே திரு. - ஆலயம்

ராகம்: ஆனந்தபைரவி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: ஜி.சே. வேதநாயகம்