58. ஆனந்தமே ஜெயா ஜெயா

பல்லவி

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்.

அனுபல்லவி

ஞானரட்சகர் நாதர் நமை-இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்

சரணங்கள்

1. சங்கு கனம், வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்,
எங்கள் ரட்சகரேசு நமை-வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால்-புகழ்

2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடையுணவும்-வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் - புகழ்

3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்,
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை-இத்
தரைதனில் குறைதணித் தாற்றியதால். - புகழ்

ராகம்: பிலகரி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. தேவசகாயம்