60. இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்

பல்லவி

இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே.

அனுபல்லவி

உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த

சரணங்கள்

1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. - இந்த

2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. - இந்த

3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. - இந்த

4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,
நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! - இந்த

5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
பசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர. - இந்த

ராகம்: பிலஹரி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: பாக்கியநாதன் தாவீது