62. இந்த வேளையினில் வந்தருளும்

சரணங்கள்

1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ
எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே.

2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்
ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே.

3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்த
ஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே.

4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்கு
அஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே

5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்
ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும், ஆவியே.

6. வாரும், வாரும்; கண் பாரும், பரிசுத்த ஆவியே!-இன்று
வந்து சபை மீதில் சிந்தை வைத்தருளும், ஆவியே.

7. தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே!-நிதம்
சித்தம் வைத்தென் மீதில் முற்றிலும் காத்திடும், ஆவியே.

ராகம்: நாதநாமக்கிரியை
தாளம்: சாபு தாளம்
ஆசிரியர்: ச. யோசேப்பு