64. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,
மகிழ் கொண்டாடுவோம்,
மகிழ் கொண்டாடுவோம்.

2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,
புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க - மகிழ்

3. அதி காலையில் சீமோனொடு யோவானும் ஓடிட,
அக்கல்லறையினின் றேகினார் இவர் ஆய்ந்து தேடிட - மகிழ்

4. பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர், என்று முன்
பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன் - மகிழ்

5. இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம்;
எல்லோருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்துபாடுவோம். - மகிழ்

ராகம்: சங்கராபரணம்
தாளம்: திஸ்ர ஏகதாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்