பல்லவி
யேசுநாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய
யேசுநாயகா, வந்தாளும்.
அனுபல்லவி
ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - யேசு
சரணங்கள்
1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே - யேசு
2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,
நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. - யேசு
3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக
மங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க. - யேசு
4. நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க. - யேசு
ராகம்: கேதாரகௌளம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்