85. இயேசுவைப் போல நட என் மகனே

பல்லவி

ஏசுவைப் போல நட-என் மகனே!
ஏசுவைப் போல நட-இளமையில்.

அனுபல்லவி

நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற,
நேயமுடன் நர தேவனாய் வந்த-ஏசுவைப்

சரணங்கள்

1. பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
பண்டிகைக்கு எருசலேம் நகர் வர,
சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
சீர்மிகு ஞானத்தை உள்ளந்தனிலெண்ணி - ஏசுவைப்

2. சொந்தமாம் நாசரேத்தூரினில் வந்தபின்
சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து,
எந்த நாளுங் கோணி எதிர்த்துப் பேசாது
இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த - ஏசுவைப்

3. எனையிளைஞரோ டீனவழிசெல்லா,
எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
ஞானம் தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு
நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன் - ஏசுவைப்

ராகம்: மோகனம்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: சா. பரமானந்தம்