97. உச்சித மோட்ச பட்டணம் போக

பல்லவி

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே;-அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

சரணங்கள்

1. சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய்,-எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல். - உச்சித

2. அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர்-அங்கே
இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே. - உச்சித

3. கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம்;-அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டன ராசன்
கீதங்கள் நாம் அறைவோம். - உச்சித

ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: சா.ஈ. கிறிஸ்மஸ்