என்னோ நீ உன்னை அலைக்கழிப்பாய்
பல்லவி
என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய்.
அனுபல்லவி
மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு உன்
மன்னவராய் இருக்கையிலே. - என்
சரணங்கள்
1. அன்னை யிடத்துருவாய், உன்னை அமைத்த தந்தை அல்லவோ?-பின்னும்,
ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ? -என்னோ
2. மாதானவள் சேயை[1] ஒரு வேளை மறந்தாலும்,-உன்னை
மறவோம் ஒருகாலும், என வார்த்தை கொடுத்தாரே - என்னோ
3. இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல்;-அவர்
நிசமாக உன் வலப்பாகத்தில் நிழல் ஆவர் என்றறிவாய். - என்னோ
4. சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன் தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும்,-தேவ
சேயர்கள் பட்டினியாகக் காணேன், என்ற திவ்ய உரையும்
பொய் யாமோ? - என்னோ
5. தேகமும் கெட்ட உலகமும் பேயும் திரண்டு உனைப் பொருதாலும்[2] - அதை
ஜெயித்தயேசு உன் மன்னவ ராகையில் சிந்தனை வேறென்ன உனக்கு? - என்னோ
6. தேவ பிதா நின் பிதாவும் இயேசு நின் சிநேகிதரும் சுத்த ஆவி-உன்றன்
தேற்றர வாளனும் ஆவதைப் பார்க்கிலும், தேவை நினக் கொன்றும் இல்லையே. - என்
-
[1] பிள்ளையை
[2] சண்டை செய்தாலும்
ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: சவரிமுத்து உபாத்தியாயர்