நரர்மீதிரங்கி அருள்
பல்லவி
ஐயனே, நரர்மீதிரங்கி அருள், ஐயனே,
சரணங்கள்
1. வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும். - ஐயனே
2. ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்;
வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள். - ஐயனே
3. மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய். - ஐயனே
4. முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன்
சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப் பந்தம் தவிர்க்கவேண்டும். - ஐயனே
5. ஆகாதவன் மடிந்து சாகா துயர் பிழைக்க,
வாகாய் அருள் செயும் திரி யேகா; உமக்குத் தோத்ரம். - ஐயனே
ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்