கர்த்தரின் பந்தியில் வா
பல்லவி
கர்த்தரின் பந்தியில் வா,-சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.
அனுபல்லவி
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி, - கர்த்தரின்
சரணங்கள்
1. ஜீவ அப்பம் அல்லோ?-கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ?-உனக்காய்ப்
பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட. - கர்த்தரின்
2. தேவ அன்பைப் பாரு;-கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு;
பாவக் கேட்டைக் கூறு;-ராப்போசன
பந்திதனில் சேரு;
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே. - கர்த்தரின்
3. அன்பின் விருந்தாமே;-கர்த்தருடன்
ஐக்யப் பந்தி யாமே;
துன்பம் துயர் போமே;-இருதயம்
சுத்த திடனாமே;
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா. - கர்த்தரின்
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: மரியான் உபதேசியார்