184. கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

சங்கீதம் பாடுவோம்

பல்லவி

கெம்பீரமாகவே, சங்கீதம் பாடுவோம்.

அனுபல்லவி

நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம், - கெம்

சரணங்கள்

1. மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே,
சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே. - கெம்

2. படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல,
குடாரமாக வெய்ததேவ வேதமே வெல.  - கெம்

3. எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ,
முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ. - கெம்

4. ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்
தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட. - கெம்

5. அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட,
மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட. - கெம்


ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்