194. சரணம் சரணம் சரணம் எனக்குன்

எனக்குன் தயை புரியும்

பல்லவி

சரணம், சரணம், சரணம் எனக்குன்
தயைபுரியும், என்பரனே.

அனுபல்லவி

மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்
மன்னா, ஓ சன்னா! - சரணம்                            

சரணங்கள்

1. தரணிதனில் வந் தவதரித்த தற்
பரனே, எனக்காக-வலு
மரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென்
மகிமை, நித்திய பெருமை. - சரணம்

2. சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத்
துரோகியான எனக்கு-நீயே
இரவு பகல் என் குறைவு நீக்க, உண்
டேது நலம் என்மீது - சரணம்

3. தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்
தானே வந்து தேட;-உனக்
கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்
கற்புதமாம் முடி சூட. - சரணம்

4. எவ்வித நன்மைக்குங் காரணனே, உனை
ஏழை அடியேனே-பற்றி
இவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே
இரங்காய், எனக் கிரங்காய் - சரணம்


ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்