1. உலகத்தைப் பலமுள்ள
கையால் ஆண்டு தினமே
என்னைக்காக்கு உண்மையுள்ள
மா பெரிய கர்த்தரே
என்னைத் தெய்வ துதிக்கும்
இந்த நாள் எழுப்பிடும்.
2. கர்த்தரின் திருநாளான
இந்த நாள் மா இன்பமே,
இதில் ஓய்வும் உண்மையான
ஆறுதலும் ஈவீரே,
இதில் ஆவியானவர்
மோட்ச வழி காட்டுவர்.
3. என் ரட்சிப்பை நடப்பிக்க
இந்த வேளை தக்கதே
தெய்வ தயவைச் சிந்திக்க
என்னைத் தூண்டி ஏவுமே
என் ஜெபம் புகழ்ச்சியும்
வானம்ட்டும் ஏறவும்.
4. தேனைப்பார்க்கிலும் தித்திக்கும்
உம்முடைய வசனம்
ஆத்துமத்தைப் போஷிப்பிக்கும்
ருசியான அமிர்தம்;
ராப்பகலும் அதை நான்
சிந்தித்தால் மெய்ப்பாக்யவான்.
5. எங்கள் ஜெபத்துக்கன்பாக
நீரே ஆமேன் என்கவும்,
மோட்சத்தில் உம்மை நேராக
நாங்கள் பார்க்கும் மட்டுக்கும்.
ஏகமாய் வணங்குவோம்
உம்மைப் பாடிப் போற்றுவோம்.
Translated from Latin by Neumann, 1715