1. கர்த்தாவே, சுத்த தயவாலே
இப்பூமியில் ஓர் சபையைத்
தெரிந்து கிறிஸ்தின் ரத்தத்தாலே
மகா இரக்கமாய் அதை
ஓர் பரிசுத்தக் கூட்டமாக
உமக்கு நியமித்தீரே.
இதற்கு முழுமனதாக
உம்மைத்துதிப்பேன், கர்த்தரே.
2. எல்லாரும் வாருங்கள், விருந்து
ஆயத்தமாகி விட்டது;
என்வீட்டில் இன்னும் இடமுண்டு
என்றிப்போதும் உம்மண்டைக்குச்
சப்பாணிகள் குருடரையும்
அன்பாய் வரவழைக்கிறீர்.
ஏழைகளையும் ஊனரையும்
உமது வீட்டில் சோக்கிறீர்.
3. பற்பல பாஷைகளைக்கொண்டு
ஜாதிகளை ஓர் சபையாய்
ப்ரசங்கத்தாலே சேர்த்துவந்து
உம்மண்டை விசுவாசமாய்க்
காப்பாற்றிக் கிறிஸ்தைத் தலையாக
சபைக்குத்தந்தருளினீர்
உமக்கு நாங்கள் ஏற்றோராக
நடக்கப் பலம் தருவீர்.
4. உமது கிருபை என்றைக்கும்
மா திட அஸ்திவாரமாம்;
அடியார் அதன்மேல் நிலைக்கும்
மட்டாக ஜெயமே உண்டாம்.
சபையில் குறை நீர்கண்டாலும்
அதை மறைத்துப் போடுவீர்,
கிறிஸ்தின் நிமித்தமே எந்நாளும்
அடியாருக்கிரங்குவீர்.
5. கர்த்தாவே, நாங்கள் சாகுமட்டும்
மெய்யான விசுவாசத்தை
கைக்கொள்ள எங்களை நடத்தும்.
உமது திரு வார்த்தையைச்
சபையில் முத்திரைகளோடும்
சிநேகத்தோடும் உண்மையோடும்
ஒன்றித்திருக்க அருளும்.
F.K. Hiller. †1726.