181. இயேசு கிறிஸ்து என்ற

1.இயேசு கிறிஸ்து என்ற
ஆட்டுக்குட்டி நம்மைமீட்டார்,
சிலுவையில் நம் தீய
பாவத்தின் கடனைத் தீர்த்தார்.
மனத்தாபத்தால் தள்ளாடும்
நெஞ்சு கிரிஸ்தின் சாவால் ஆறும்.

2.நாம் பககைஞராயினும்
கிறிஸ்து நமக்காய் மரித்தார் ;
இத்தால் தமதன்பையும்
எம்பிரான் விளக்குவித்தார்.
கிறிஸ்தால் நீதியக்கப்பட்டோர்
என்றென்றைக்குஞ் சாபமற்றோர்.

3.நாம் பகைஞராம் அப்போ
ஸ்வாமி அவர் சாவுக்காக
தயவானால், இப்போதே
எத்துணை அதிகமாக
நாம் சீர்ப்பட்டபின் அப்பாலே
வாழ்வோம் அவர் ஜீவனாலே.

4.நாம் அவருக்குள்ளேயும்  
அவர் நமக்குள்ளுமாமே;
அவராலே முற்றிலும்
பாவத் தீங்கழிவதாமே.
வெகு மேன்மையை அடைந்தோம்
தேவமைந்தராய் அமைந்தோம்

5.ஆ, பிதாவே, உமக்குத்
தோத்திரங் கணந் துதியும்;
இன்னும் பாவமானது
கண்டால், துயரம் அழியும்;
உமாதாவியால் நன்றாக
யாவுஞ் சுத்தமாவதாக.

J. J. Breithaupt,  † 1735.