1. களித்துப்பாடு,
தேவ இரக்கத்தை
நன்றாய்க் கொண்டாடு,
மெய்ச்சபையே; உன்னை
வரவழைத்துத்தயவாகத்
தேடினோர் அன்பைத் துதிப்பாயாக::
2. கர்த்தர் பலத்த
கையினால் ஆளுவார்,
புகழப்பட
அவரே தக்கவர்,
விண்சேனை பக்திப் பணிவாக
அவரைச் சூழ்ந்து துதிப்பதாக::
3. நிர்ப்பந்தமான
அஞ்ஞானக் கூட்டமே,
வெளிச்சம் காண
விழிக்க வேண்டுமே;
உன்மீட்பராலே எந்தத்தீங்கும்
பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும்::
4. உணவீகின்றார்;
தகப்பன் வண்ணமாய்
காப்பாற்றுகின்றார்,
தினமும் திரளாய்
அவர்கை எவ்விடத்திலேயும்
பூரணமான இரக்கஞ்செய்யும்::
5. மெய்க்கூட்டத்தாரே,
கர்த்தரைப் பாடுங்கள்.
பூலோகத்தாரே,
துதிக்க வாருங்கள்.
இங்கினி பயமே இராது;
கிறிஸ்துவின் சபையே, போற்றிப்பாடு::
Math. Apelles V. Lowenstern. † 1648.