1. த்ரியேகரே, தயாபரா
நீர் ஞானஸ்நானமான
முழுக்கால் எங்களை மகா
பெரிய தயவான
அன்போடே பாவங்களறச்
சுத்திகரித்த உன்னத
அருளுக்குப் புகழ்ச்சி.
2. நான் பாவமுள்ள சாதியில்
பிறந்த கெட்டபிள்ளை,
நீர் தெய்வமென்றென் மனத்தில்
பணிந்த எண்ணமில்லை.
நான் உமக்கு எந்நேரமும்
தெய்வீக வசனத்துக்கும்
எதிர்ப்பதே என் ஸ்பாவம்.
3. இத்தன்மை கெட்டோனாகிய
நான் மீளவும் பிழைத்து.
வெளிச்சங்கண்டு சீர்ப்பட
நீர் என்மேல் பட்சம் வைத்து
இப்பாவியை முழுக்கினால்
வேறாகச் செனிப்பிக்கையில்
கடாட்சித்தீர், பிதாவே.
4. என் இயேசுவே, நீர் எனக்காய்
இரத்தஞ் சிந்தி மாண்ட
பலன் முழுக்காலே உண்டாய்
பிறப்பால் என்னை ஆண்ட
என் சாபத்தை விலக்குது,
ஆதாம் இழந்த வாழ்வுக்குத்
திரும்பவும் உள்ளாக்கும்.
5. தேவாவியே இப்போ நீர் தான்
என் ஆவிக்கன்பாய்த் தாற
பலத்த சாட்சியாலே நான்
மகிழ்ந்து, மனதார,
அப்பா பிதாவே என்றதாய்
கர்த்தாவை நோக்கிப் பிள்ளையாய்
விண்ணப்பஞ் செய்யக் கூடும்.
6. நான் இதை நித்தஞ் செய்யவும்
ஞானஸ்நானத்தில் பெற்ற
என் ரட்சகரை என்றைக்கும்,
விடாமல் அவர் கிட்ட
பிசாசின் மோசம் யாவையும்
செயிக்கச் சக்தி தேடவும்
அடியேனை நீர் ஏவும்.
7. தயாபரா, நான் உமது
தெய்வாலயமாய்ப் போன
கனம் எப்போதும் எனக்கு
இடுக்கண் வந்தால் தோன்ற
நீர் அதை எனக்கு நன்றாய்
என் விசுவாசந் திடனாய்
இருக்க நினைப்பூட்டும்.
8. நான் உம்முடையோனாகவும்
முழுக்குப் பெற்றோனென்று
எந்தெந்தப் பாவங்களையும்
விலகி பேயை வென்று,
என் ஆவி தேகம் யாவையும்,
கர்த்தாவே உமக்கென்றைக்கும்
மெய்யாய்ப் படைப்பேனாக.
9. நான் பலவீனத்தால் விழும்
போதன்பாய் மன்னிக்கவும்
ஆ, என்னை அனுதினமும்
மென்மேல் சுத்திகரியும்
கர்த்தா, என்னை முழுவதும்
நீர் மீட்டுச் சேர்க்குமட்டுக்கும்
நான் மாய மற்றிருக்க.