1. சின்ன பரதேசி
மோட்சம் நாடினேன்;
லோகத்தின் சிற்றின்பம்
வெறுத்து விட்டேன்.
2. முத்தி அடைந்தோரை
பாவம் சேராதே;
துக்க சத்தம் அங்கே
என்றும் கேளாதே.
3. சின்ன பரதேசி
இங்கே சீர்ப்படேன்;
அங்கே வெள்ளை அங்கி
தரித்துக்கொள்வேன்.
4. என்னைச் சுத்தமாக
காரும், இயேசுவே;
தினம் வழி காட்டும்,
தெய்வ ஆவியே.
5. சாந்த இயேசு ஸ்வாமி,
உம்மை நேசிப்பேன்;
என்றும் உந்தன் சீஷன்
ஆகப் பார்க்கிறேன்.