1. ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்;
செழிக்கும் ஐக்யம் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்.
2. மெய்ப்பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்யம் ஒன்றியே,
செய் சேவை சேர்க்கும் மாந்தரைப்
பொற் கயிற்றாலுமே.
3. வாரும், கைகோரும், சபையில்,
எம்மனுமக்களே;
ஒரே பிதாவைச் சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே.
4. சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
மாந்தர்தாம் யாரும் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்.
St.Bernard:CM
John Oxenham † 1908