2. அடியேன் மனது வாக்கும் கொடிய

1.அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமே
ஆவியால் சீர்படுத்தும், ஸ்வாமீ!

2.உமக்கே யான் சொந்தம்; தீயோர் தமக் கந்நியனாய்ப்போக
உதவும் எளியேனுக்கென ஸ்வாமீ!

3. அன்பின் வடிவே! பாவத் துன்பம் இல்லாமல், வாழ
அடைந்தேன் உமை யான், சேரும், ஸ்வாமீ!

4. நீரே எனக்கு வேண்டும், தாரணி முற்றும் வேண்டாம்
நீசனை ஆட் கொள்ளும், என் ஸ்வாமீ!

5. பூமியில் வசித்தும், நீர் தாமே எனது வாஞ்சை
புகலிடம் அளியும், என் ஸ்வாமீ!

6. சஞ்சல மேதெனக்கு? பஞ்சம் படைகளேது?
தஞ்சம் நீர் தாம் எனக்கென் ஸ்வாமீ!

7. விண்ணி லோரிடமும், யான் மண்ணுலகை வெறுக்க
மெய்த் தவமும் தாரும். என் ஸ்வாமீ!

ராகம்: ஆனந்தபைரவி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: தேவவரம்