பல்லவி
அருமை ரட்சகா, கூடிவந்தோம்;-உம
தன்பின் விருந்தருந்த வந்தோம்.
அனுபல்லவி
அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க - அருமை
சரணங்கள்
1. ஆராயும் எமதுள்ளங்களை,-பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூரும். - அருமை
2. ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்;
கோவே! மா பயபக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ. - அருமை
3. உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்;-உம-து
ஒளி முகதரிசன முற்றோம்;
சமாதானம், அன்பு சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும். - அருமை
4. கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்கியம்;
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே, வந்தனம்! - அருமை
5. எங்கட்காய் உமை ஒப்புவித்தீர்;-கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர்;
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம்,
புண்ணிய நாதரே! - அருமை
6. பந்திக் கெசமான் நீர் யேசுவே!-எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே;
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய. - அருமை
ராகம்: பிலஹரி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: வே. சந்தியாகு