46. ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை

கண்ணிகள்

1. ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
அருளிச் செய்தீரே,
அவ்விதமாகவே இவ்விருபேரையும்
இணைத் தருள்வீரே.

2. மங்களமாய் திருமறையைத் தொடங்கி
மங்களமாய் முடித்தீர்,
மங்கள மா மணவாளனாய் மைந்தனை
மாநிலத்தில் விடுத்தீர்.

3. ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக்
கருள் புரிந்தீரே,
அங்ஙனமே இந்த மங்களம் செழிக்க
ஆசியருள்வீரே.

4. கானாவூர் கல்யாணம் கண்டு களித்தஎம்
கர்த்தரே வந்திடுவீர்,
காசினி மீதிவர் நேசமாய் வாழ்ந்திடக்
கருணை செய்திடுவீர்.

5. இன்பத்தும் துன்பத்தும் இம்மணமக்கள் தாம்
இசைந்து வாழ்ந்திடவே,
அன்பர் உம் பாதமே ஆதாரம் என்றும்மை
அணுகச் செய்திடுவீர்.

ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வி. ஜயராஜ்