47. ஆமென் அல்லேலூயா மகத்துவத்

பல்லவி

ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா;
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா.

அனுபல்லவி

ஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்
துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே! - ஆமென்

சரணங்கள்

1. வெற்றிகொண் டார்ப்பரித்து-கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து,-முறித்து;
பத்ராசனக் கிறிஸ்து-மரித்து,
பாடுபட்டுத்தரித்து, முடித்தார். - ஆமென்

2. சாவின் கூர் ஒடிந்து,-மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து,-விழுந்து,
ஜீவனே விடிந்து,-தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது. - ஆமென்

3. வேதம் நிறைவேற்றி,-மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி,-பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி,-கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார். - ஆமென்

ராகம்: சங்கராபரணம்
தாளம்: திஸ்ர ஏகதாளம்
ஆசிரியர்: வேதநாயகம் சாசுதிரியார்