48. ஆயன் நான் தானே மெய்யாய்

பல்லவி

ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல
ஆயன் நான் தானே.

சரணங்கள்

1. ஆயன் நான் தானே நேயமிகுத்துச்ச
காயம்புரியும் மாதூய பிதாவினோர்
சேயனுந் துஷ்ட ஓநாயென்ற பொல்லாத
பேயை யழிக்கும் ஐங்காயனுமாகிய - ஆயன்

2. சீலகுண இஸ்ராவேலென்ற பத்தனைப்
போலமந்தைக் கனுகூலகமாய்த் தன்னண்டை
ஞாலத்தினாடுகள் கோலத்துடன் சேரக்
காலந் தப்பாதென்றும் வேலைசெய்யும் நல்ல- ஆயன்

3. இட்டமுள்ள ஆட்டுக்குட்டிகளைக் கொல்லுந்
துட்ட நரிகளைக் கட்டுக்கண்ணிக்குள்ளே
பட்டுக் கொள்ளப்பண்ணி திட்டத்துடனின்று
வெட்டிப்போடும் மிகக் கெட்டிக்கரமுள்ள - ஆயன்

4. அன்புற்ற தாயவள் தன்பெற்ற பிள்ளையை
இன்புற்று நோக்கும்போல் துன்புற்ற ஆட்டினை
என்பெற்ற பிள்ளையாய் நண்புற்று நோக்கியே
பொன் பெற்ற கையினால் நான் பற்றித் தூக்குவேன் - ஆயன்

5. ஆட்டுமந்தைக்கூலிக் கேட்டுவன் போலநான்
காட்டோனாயைக்கண்டால் ஒட்டம் பிடிப்பேனோ?
மாட்டேனே மெய்யாக ஈட்டியினாற்குத்திப்
போட்டிடுவேன் அப்போ வேட்டைக்காரன் போலே - ஆயன்

6. சாவுறு மாட்டிற்காய் ஓவியமான வென்
சீவன்விடக் கொஞ்சமாவ தஞ்சுவேனோ?
ஆவலுடனல்லோ ஆவியைப் போக்குவேன்
பாவப் பசாசுகள் கூவிச் சாகும்படி - ஆயன்

7. காலை நேரத்திலும் மாலை நேரத்திலும்
சீலந் தப்பாமலும் காலந் தப்பாமலும்
நூலென்ற வேதத்தின் பாலென்றுந் தங்கியே
வேலைசெய்யும் நல்ல வேலைக்காரருள்ள - ஆயன்

ராகம்: காம்போதி
தாளம்: சாபு தாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்