பல்லவி
ஆரணத் திரித்துவமே,-எமை
ஆண்டருள், மகத்துவமே.
அனுபல்லவி
பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,
பொன்னுலகத்தெழும் உன்னதமான
போத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே, நித்திய - ஆரண
சரணங்கள்
1. அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள்
ஆபத் தனைத்தையும் தீரும்;
இன்றும் என்றெங்களைச் சேரும்;-திரு
இரக்கத்தால் முகம் பாரும்;
நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்;
நம்பரா, கருணாம்பரா,
ஞானத் தனு மானத்தொளிர்
மேன்மை திவ்விய பானத்தருள். - ஆரண
2. மூவர் ஒன்றான யெகோவா,-உயர்
முக்ய கிருபையின் தேவா,
மேவி அடியாரைத் தேவா,-பல
வெவ்வினையினின்றும் கா, வா;
பாவிகள் நாங்கள் ஏவையின் மக்களே,
பக் ஷமே, பரம பொக் ஷமே,
பாடும்புகழ் நாடும்பரி
வோடும் தயை நீடும்பரா! - ஆரண
ராகம்: பியாகடை
தாளம்: ரூபக தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்