51. ஆர் இவர் ஆரோ

பல்லவி

ஆர் இவர் ஆரோ? ஆர் இவர் ஆரோ?
ஆர் இவர்? பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ?

சரணங்கள்

1. ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே,
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ? -ஆர்

2. ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ?
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ? -ஆர்

3. கர்த்தத்துவமோ காணாது தோள் மேல்;
சுற்றிவைக்கப் பழந்துணியோ? இவர்
தூங்கப் புல் அணையோ? -ஆர்

4. சேனை தூதர் இதோ! சிறப்புடன் பாட,
கானகக் கோனர் காண வர, இவர்
கர்த்தர் ஆவாரோ? -ஆர்

ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: சாபுதாளம்
ஆசிரியர்: வே. சாசுதிரியார்