75. இயேசு நசரையி னதிபதியே

பல்லவி

யேசு நசரையி னதிபதியே,-பவ நரர்பிணை யென வரும்.

அனுபல்லவி

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. - யேசு

சரணங்கள்

1. இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. - யேசு

2. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். - யேசு

3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடு பாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு, போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும். - யேசு

ராகம்: தோடி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: சவரிமுத்து உபாத்தியாயர்