87. இரங்கும் இரங்கும் கருணைவாரி

பல்லவி

இரங்கும் இரங்கும், கருணைவாரி,
ஏசு ராசனே,-பவ-நாசநேசனே!

சரணங்கள்

1. திரங்கொண்டாவி வரங்கொண்டுய்யச்
சிறுமை பார், ஐயா;-ஏழை-வறுமை தீர், ஐயா. - இரங்கும்

2. அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன்;-மிகப்-பயந்து சாகின்றேன். - இரங்கும்

3. தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன், ஐயா,-தெரிவைப் -புரிகிலேன், ஐயா. - இரங்கும்

4. பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள், ஐயா;-தயை-புரிந்து மீள், ஐயா. - இரங்கும்

ராகம்: மணிரங்கு
தாளம்: ஏகதாளம்
ஆசிரியர்: அ. வேதக்கண்