88. இராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா

பல்லவி

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

அனுபல்லவி

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக - ராச

சரணங்கள்

1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்த்ர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே;
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை - ராச

2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே;
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித - ராச

3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே,
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ - ராச

4. வீடுதேடவுமே, தந்தை நாடுகூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
நரவேட மேவினான்; சுரராடு கோவினான்; பர - ராச

ராகம்: ஹரிகாம்போதி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்