பல்லவி
ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்!-அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க,
அவர் திரு நாமமே விளங்க,-அவர் திருநாமமே விளங்க,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!
அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே!
சரணங்கள்
1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்,
மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்!
2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,
மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்!
3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்
புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்!
4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,
சிந்தனையை வைத்துக்கொண்டு பூமுடி சூட்டுங்கள்!
5. சின்ன நாடுகளை விட்டுச் சீக்கிரம் ஏகுங்கள்,
பொன்னகராம் சாலேமுக்குப் போய் முடி சூட்டுங்கள்!
6. குற்றமில்லாப் பாலகரே, கூடிப் குலாவுங்கள்,
வெற்றி வேந்த ரேசுவுக்கே வெண்முடி சூட்டுங்கள்!
7. யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்,
ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்!
8. சகல கூட்டத்தார்களே, சாஷ்டாங்கம் செய்யுங்கள்,
மகத்வ ராசரிவரே, மாமுடி சூட்டுங்கள்!
ராகம்: சங்கராபரணம்
தாளம்: திஸ்ர ஏகதாளம்
ஆசிரியர்: அ.ஐ. பிச்சைமுத்து