100. உயர்பரனில் உதித்ததெல்லாம் உலகதனை

சரணங்கள்

1. உயர்பரனில் உதித்ததெல்லாம் உலகதனை ஜெயிக்கு மன்றோ?
உயிருள மெய்விசுவாசமே, உலகை ஜெயிக்கும் ஜெயமே.

2. ஏசுதெய்வ சுதனென்றே ஏற்க விஸ்வாசிப்பவனே,
மாசு நிறை உலகதனை மறுத்தவர்போல் ஜெயிப்பவனே.

3. தற்பரனார் தருஞ்சாட்சி தஞ்சுதனைக் குறிக்குமன்றோ?
பொற்புறுமிக் சாட்சியமே புவிதனக்கு மேலாமே.

4. நித்தியனார் நமக்கீந்த நித்தியமாஞ் சீவனது
நித்தியராந் தஞ் சுதனுள் நிலைத்துளதாம் அச்சாட்சி.

5. திருச்சுதனார் தமையுடையோன் பெருக்கமுறும் ஜீவனுளோன்,
கருணையுளார் தமையற்றோன் சிறிதளவுஞ் ஜீவனற்றோன்.

6. நீடூழி பிழைப்பவரே, நீசரும்மில் பிழைத்தென்றும்
பாடற்றெம் அகமகிழ பரிவொடெமைப் பாருமையா.

ராகம்: ஆரமி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ல. யோசுவா