தேவதூதர் பாடல்
கண்ணிகள்
1. உன்னதத்திற் பரற்கு மகிமை உலகிற் சமாதானம்
இந்நில மானிடர் மேல்பிரியம் இன்றென்றும் உண்டாக.
2. வான பரன்மகிமை பவத்தால் மறைந்த தாயிருக்கப்
பானொளிபோற் சுதனார் பிறந்தார் பாவ இருள் நீக்க.
3. பாவத்தினால் புவிக்கும் பார்க்கும் பலத்து நின்றயுத்தம்
தாவீதின் சிற்றூரில் பிறந்தோர் தக அமர்த்தினரே.
4. மானிடனாய்ப் பிறந்த சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு
ஈன மானிடர்மேல் பிரியம் இன்றே உண்டாயினதே.
ராகம்: பைரவி
தாளம்: சாபுதாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்