கர்த்தருடைய ஜெபம்
கழிநெடில்
உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும்
ஒளிர்பிதாவே, உனின் நாமம்
உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக;
உனது ராச்சிய முறை வருக;
முன்னிய உனது சித்தமே பரத்தில்
முடியுமாப் போல, இப்புவியில்
முடிவுறச் செய்யப் படுவது மாக;
முழுதும் நின் கரத்தையே நோக்கும்
நின் அடியார்க்கன் றாடக உணவு
நிரம்பவே அருள்; பிறர் இயற்றும்
நீதிக்கே டினை யாம் பொறுப்பது போல,
நிமலனே, எம்பவம் மனியாய்;
இன்னமும் எமைச்சோ தனைக்குட் படாமல்
இடர் தவிர்த் திரக்கமாய்க் காவாய்;
இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
என்றும் உன் உடைமையே; ஆமென்.
ராகம்: ஹரிகாம்போதி
தாளம்: ஏகதாளம்
ஆசிரியர்: சவரிமுத்து உபாத்தியாயர்