120. எருசலேமே எருசலேமே எருசலேமே

எருசலேமே

1. எருசலேமே! எருசலேமே! எருசலேமே! எருசலேமே!
என் பிரிய சாலமே!
விரும்பி வந்தேன் பார்,
இதோ பார், இதோ பார்!

2. கனியைக் காணேன், கனியைக் காணேன்,
கனியைக் காணேன், கனியைக் காணேன்,
கசிந்துருகியே
தனியே யான் வந்து
தவிக்கிறேன், தவிக்கிறேன்

3. இந்த நாளாயினும், இந்த நாளாயினும்,
இந்த நாளாயினும், இந்த நாளாயினும்
இணங்க மனமோ
எந்தனிடம் பெறச்
சமாதானம், சமாதானம்.

4. கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ?
கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ?
கர்த்தன் உன் ராஜாவைக்
கண்டானந்தித்துமே
களிகூர, களிகூர‌


ராகம்: இந்துஸ்தானி
தாளம்: அடதாளம்
ஆசிரியர்: வேதநாயகம் பாகவதர்