121. எல்லாம் இயேசுவே எனக்கெல்லா மேசுவே

எல்லாம் யேசுவே

பல்லவி

எல்லாம் யேசுவே,-எனக்கெல்லா மேசுவே.

அனுபல்லவி

தொல்லைமிகு மிவ்வுலகில்-துணை யேசுவே. - எல்லாம்

சரணங்கள்

1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும், - எல்லாம்

2. தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்,
சந்தோட சகலயோக, சம்பூரண பாக்யமும், - எல்

3. கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்,
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும், - எல்லாம்

4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும், - எல்லாம்

5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும்-சம்பாத்யமும்
பிணையாளியும்[1] மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும், - எல்லாம்

6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்,
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும், - எல்லாம்


[1] பொறுப்பாளி


ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: யே. ஞானமணி