129. என்றைக்கு காண்பேனோ

என்றைக்குக் காண்பேனோ?

பல்லவி

என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?

அனுபல்லவி

குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என்

சரணங்கள்

1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. - என்

2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,
சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை. - என்

3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். - என்


ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்