என்ன என் ஆனந்தம்!
பல்லவி
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
இயம்பலாகாதா,
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே.
சரணங்கள்
1. கூடுவோம், ஆடுவோம், பாடுவோம், நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்;
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்.
2. பாவங்கள், சாபங்கள், கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே;
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே.
3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்-கு
அருளினதாலே,
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகரவேண்டியதே.
4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
ஜெயக் கொடியுடனே,
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: சத்தியநாதன்