146. ஐயா உனதருள் புரி அருமை மேசையா

ஐயா உனதருள்புரி
 
பல்லவி

ஐயா, உனதருள் புரி, அருமை மேசையா!

அனுபல்லவி

பொய்யா மருள்வினை, செய்யா துலகதில்
நையா தடிமைகொள், துய்யா, மெய்யா. - ஐயா

சரணங்கள்

1. ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா,
சாதா ரண வேத வினோத சங்கீதா,
காதா ர வினவு,[1] நீ தா எனின் குறை,
தாதா, பர குரு நாதா, போதா! - ஐயா

2. அந்தா தி, அனாதி, பிதா ஒரு மைந்தா;
சிந்தா குலமே[2] தவிர், நீடு சுகந்தா;
உந்தா பரம்[3] அருள் எந்தா,[4] ஞானப்ர
பந்தா,[5] வருசதா னந்தா நந்தா! - ஐயா

3. ஈசா, நசராபுரி மேவிய வாசா,
பூசா[6] விதி மாமறை புகழுபதேசா,
மாசா மிகு பவ நாசா, எருசலை
ராசா, ஒரு சரு வேசா, நேசா. - ஐயா


[1] கேளு
[2] மிகு வியாகுலம்
[3] உதவி
[4] எந்தை
[5] வேத முதல்வன்
[6] பூசைக்குரியவன்

ராகம்: மாஞ்சி
தாளம்: ஏகதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்