154. ஓகோ பாவத்தினைவிட் டோடாயோ

பாவத்தினை விட்டோடாயோ?

பல்லவி

ஓகோ! பாவத்தினைவிட் டோடாயோ?
உள்ளமே, யேசு அன்பை நாடாயோ?

சரணங்கள்

1. மா கிருபையாக, ஏகன் அன்பாக
வந்ததிலையோ பூவில் உனக்காக? - ஓகோ!

2. நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய்
நாதன் உன் பொருட்டிருந்தார், கேளாய்? - ஓகோ!

3. யூதர்கள் வைய, வேதனை செய்ய,
உன் பவம் செய்த தவர் உளம் நைய. - ஓகோ!

4. சிலுவையில் இறுக்க, உலகரும் நொறுக்கச்
செய்த துன் பவம் மேசியா இறக்க. - ஓகோ!

5. அலகை[1] உன் மீது பல வகைத் தீது
ஆவலுடன் செய்வதால் புவி மீது. - ஓகோ!

6. ஐயோ! என் மனமே, வையகம் வனமே;
அழியா உலகில் அன்புற் றனுதினமே. - ஓகோ!


[1] பிசாசு

ராகம்: ஹரிகாம்போதி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்