கர்த்தனைக் கண்டேன்
பல்லவி
கண்டேனென் கண்குளிர-கர்த்தனை யின்று
அனுபல்லவி
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக்[1] கையிலேந்திக்-கண்
சரணங்கள்
1. பெத்தலேம்-சத்திர முன்னணையில்
உற்றோருக்-குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - கண்
2. தேவாதி-தேவனை, தேவசேனை
ஓயாது-தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்
3. பாவேந்தர்-தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர்-அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான் - கண்
4. முத்தொழிற்-கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை-மீட்க எனை நத்தி வந்த[2] மன்னவனைக் - கண்
5. மண்ணோர்-இருள்போக்கும் மாமணியை,
விண்ணோரும்-வேண்டிநிற்கும் விண்மணியைக், கண்மணியைக் - கண்
6. அண்டி னோர்க்-கன்புருவாம் ஆரணனை,
கண்டோர்கள்-கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் - கண்
7. அன்னையாம்-கன்னியும் ஐயனுடன்
முன்னறி-யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் - கண்
ராகம்: பியாகு (தேசிகம்)
தாளம்: ஏகதாளம்
ஆசிரியர்: மு. ஆபிரகாம் பண்டிதர்
[1]. அரசனை
[2]. விரும்பி