161. கண்களை ஏறெடுப்பேன்

கண்கணை ஏறெடுப்பேன்

பல்லவி


கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்.

அனுபல்லவி


விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்.  - கண்

சரணங்கள்


1. காலைத்தள்ளாட வொட்டார்-உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் - கண்

2. பக்க நிழல் அவரே - எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டென்னை அக்காவல் புரியவே - கண்

3. எல்லாத் தீமைகட்கும்-என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் - கண்


ராகம்: பியாகு
தாளம்: சாபுதாளம்
ஆசிரியர்: த. ஐயாத்துரை