192. சரணம் சரணம் அனந்தா-1

சரணம் சரணம் அனந்தா

பல்லவி

சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,[1]
தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்

1. தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே,
சென்று பல பாடுபடவும் தயவானார்.- சரணம்

2. தந்து[2] செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்,
தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான். - சரணம்

3. பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி,
பாதகனை யோ? இறையை யோ? விட, என்றான். - சரணம்

 4. ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று,
திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார். - சரணம்

 5. தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே,
தற்பரனைக் கொல்வதற்கங் கொப்புக்கொடுத்தான். - சரணம்

 6. கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக,
காவலனைக் குருசறைப் பாவியும் தீர்த்தான். - சரணம் 


ராகம்: நீலாம்புரி
தாளம்: திஸ்ர ஏகதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்


[1]. சத்து, சித்து, ஆனந்தம் என்னும் இறைநிலை
[2]. தந்திரம்