சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
பல்லவி
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.
சரணங்கள்
1. நம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர். - சமாதானம்
2. நேய கிருபையின் ஒரு சேயர்[1] இவர்,
பரம ராயர் இவர், நம தாயர்[2] இவர். - சமாதானம்
3. ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய். - சமாதானம்
4. ஆரணம்[3] பாடி, விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, இடையோர் கூடவே. - சமாதானம்
5. மெய்யாகவே மே சையாவுமே
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே. - சமாதானம்
6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே - சமாதானம்
ராகம்: காமி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வேதநாயகம் சாசுதிரியார்
[1]. மகன்
[2]. மேய்ப்பர்
[3]. வேதம்